State Second in 2016


நம் பள்ளி மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றமைக்கு அனைத்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும், பணியாளர்களுக்கும் பள்ளியின் சார்பாக எண்ணற்ற நன்றிகள்.
Mr.Sekar School Secretary in Media

சாம்பவிகா பள்ளி மாநிலத்தில் 2ஆம் இடம் பெற்றதற்கும் பள்ளியின் தொடர் சாதனைகளுக்கும் பள்ளிச் செயலர் திரு சேகர் அவர்கள் பத்திரிக்கைக்கு கூறிய பதில், "ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பால் மட்டுமே இச்சாதனைகள் நிகழ்ந்தது என்று இக்கேள்விக்கு ஒரே வரியில் பதில் கூறி விட முடியும், ஆனால் ஆசிரியர்களின் உழைப்பையும் பெற்றோர்களின் தியாகத்தையும் இப்படி ஒரே வரியில் கூறுவது என்பது சாலச்சிறந்ததன்று. ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும்.
அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள் .... தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் தன் பிள்ளைகளை வளர்க்க அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைத்து அதற்கு அவர்கள் படும் கஷ்டத்தை வார்தைகளால் விவரிக்க இயலாது... இப்படிபட்ட ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வெறும் வார்த்தைகளால் மட்டும் பாராட்டிவிட முடியாது என்பதை நான் நன்கு அறிவேன், ஆயினும் இப்படிபட்ட ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நம் பள்ளி கொண்டதற்கு என் சார்பாகவும் நம் பள்ளி சார்பாகவும் எண்ணிலடங்கா நன்றிகள்.
Alumni Registration
Sambaviga Alumni Registration for Official gatherings and Get-Togethers
சாம்பவிகா பள்ளியின் முன்னாள் மாணவ மணவியர் கூட்டமைப்பு பதிவீட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். Register